Connect with us

Cinemapettai

சம்பளத்தை ஏமாற்றிய தயாரிப்பாளர்களை ஓடவிடும் முன்னணி நடிகர்.. ஹிட் படம் கொடுத்த கெத்து

tamil-actor-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சம்பளத்தை ஏமாற்றிய தயாரிப்பாளர்களை ஓடவிடும் முன்னணி நடிகர்.. ஹிட் படம் கொடுத்த கெத்து

எப்பொழுதுமே நடிகர்களைவிட தயாரிப்பாளர்களின் கைதான் ஓங்கி இருக்கும். காரணம் அவர்கள் இல்லையேல் ஹீரோக்கள் இல்லை என்பதே. இதையே சாக்காக வைத்துக் கொண்டு நடிகர்களை ஏமாற்றும் வழக்கமும் நிறைய உள்ளது. அந்த வகையில் சமீப காலத்தில் ஏமாந்த முன்னணி நடிகர் என்றால் அது அந்த ஒல்லி நடிகர் தான்.

அட்வான்ஸ் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு படம் சரியாக ஓடவில்லை என்று சம்பளத்தை அவருக்கு டிமிக்கி கொடுத்து உள்ளார்கள். அதை சமீபத்தில் ஒரு மேடையில் வெளிப்படையாகவே கூறி இருந்தார் அந்த ஒல்லி நடிகர். அவரின் பேச்சு சம்பளம் சரியாக கொடுப்பவர்களே உயர்த்தியும், சம்பளம் கொடுக்காமல் விட்டவர்களை தாழ்த்தியும் பேசுவதைப் போல் இருந்தது. இதெல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முன்னாலே அரங்கேறியது இன்னும் கொடுமை.

ஆனால் ஒல்லி நடிகர் தன் படங்கள் சுத்தமாக ஓடவில்லை என்பதை ஒரு இடத்தில் கூட ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெற்றி இயக்குனருடன் சமீபத்தில் அவர் நடித்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனால் தற்போது தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களை மொத்த சம்பளத்தையும் முன்னாடியே கொடுத்துவிட வேண்டும் என ஒத்த காலில் நிற்கிறார் அந்த ஒல்லி நடிகர்.

இவர் தயாரிப்பாளராக இருந்தபோது சிவ நடிகரை ஏமாற்றியதை அவரே ஒரு மேடையில் அழுது புலம்பினார் என்பது அனைவரும் அறிந்ததே.

என்ன நடிப்பின் நாயகனே.. உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top