1000 கோடி பட்ஜெட்டில் களத்தில் இறங்கியுள்ள சன் பிக்சர்ஸ்.. இந்த லிஸ்ட்ல சிக்காத தல அஜித்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் மற்றும் சூர்யா இவர் நடிப்பில் வெளியாக படங்கள் அனைத்துமே ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்கள் மற்றும் போன்ற தயாரிப்பு நிறுவனம் இவர்களை வைத்து பல படங்களை தயாரித்து வருகின்றன.

தற்போது சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன், விஜய் நடிப்பில் பீஸ்ட், ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த மற்றும் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை அனைத்துமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இவ்வளவு ஏன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அனைத்து நடிகரின் படமும் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல நடிகர்களின் படங்களில் ஒரே சமயத்தில் வெளியிட்டு வந்தது அதன்பிறகு பல வருடங்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் படங்களை தயாரிக்காமல் இருந்ததால் மற்ற தயாரிப்பாளர்கள் நடிகர்களை வைத்து படங்களை தயாரித்தனர்.

தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களையும் தயாரிக்க முடிவெடுத்துள்ளது தற்போது இவர்களைத் தாண்டி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் படங்களை கூட தயாரிக்கும் நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

suriya
suriya

தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக தயாரிப்பதில்லை மேலும் இவரது நடிப்பில் வெளியான வலிமை படம் கூட போனிகபூர் தான் தயாரித்துள்ளார். அடுத்தது அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படம் கூட பிரபல தயாரிப்பாளர்களில் யாராவது ஒருவர் தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

beast-vijay-cinemapettai-01
beast-vijay-cinemapettai-01

மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்று கூடி தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது. இந்த அனைத்து படங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் சன் பிக்சர்ஸ் முதலீடு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த லிஸ்டில் தல அஜித் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush
dhanush
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்