Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கத்தான் விவாகரத்து வரை சென்றேன்.. பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக கொண்டு உருவான திரைப்படத்தில் கதாநாயகனாக வெற்றி பெற்றவர் அந்த பிரபல நடிகர். அதன்பிறகு வெற்றி தோல்வி என மாறி மாறி மாறிப் பயணித்து வருகிறார். சமீபத்தில் வித்தியாசமான கதையில் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற நடிகர், அதன்பிறகு தேவையில்லாமல் கமர்சியல் ஹீரோவாக ஆசைப்பட்டு தொடர் சரிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அந்த நடிகர் தனது இல்லற வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை தொடர்ந்து ஒரு சில பேட்டிகளில் குறிப்பிட்டு வருகின்றார். சமீபத்தில் தனது காதல் மனைவியை பிரித்த காரணத்தினால் அவர் வாழ்க்கையையே நிறுத்து விட்டதைப் போல் பேசி வருகிறாராம்.
ஆனால் அவர் மனைவியின் தரப்பில் விசாரித்தபோது தெரியவந்தது நடிகரின் தில்லுமுல்லு வேலைகள். மக்களால் கவனிக்கப்படும் நாயகனாக மாறிய பிறகு தினமும் குடிப்பழக்கத்தை கையாண்டு மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டு உள்ளார். அதன் காரணமாகவே அவர் மனைவி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது.
அதன்பிறகு மனைவி இல்லாமல் நான் இல்லை, மனைவி சொல்லே மந்திரம் என அநியாயத்திற்கு பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நாடகம் போட்டுள்ளார். ஆனால் அனைத்தும் தனது புதிய காதலியை அடையாளப்படுத்துவதற்காகவே என அவரைச் சார்ந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அந்த நடிகர் சமீபகாலமாக ஒரு கோடீஸ்வர பெண்ணோட ஊர் சுற்றி வருகிறாராம். அதை அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார். பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும் ஹீரோக்கள் கூட தயாரிப்பாளர்களாக மாற யோசிக்கும் நிலையில், சுமாரான படங்களை கொடுத்து பெரிய பட்ஜெட்டில் எப்படி படம் எடுக்கிறார்? என்று யோசிக்கும் வேளையில் தான் வெளிவந்துள்ளது உண்மை.
நடிகருக்கு சிக்கிய புதிய காதலிதான் இவர் தயாரிக்கும் படங்களுக்கு ஸ்பான்சராம். இதனால் நடிகர் மொத்தமும் தற்போது காதலியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளாராம். மேலும் காதலி கொடுத்த ஐடியாவில் தான் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வேஷம் போடுகிறாராம்.
சமீபத்தில் கூட தன் மனைவியே உருகி உருகி காதலித்ததாகவும், எப்படி இந்த விவகாரத்தில் நடந்தது என்றே தெரியவில்லை என ஒரே போடாக போட்டு விட்டார். சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கையில், தற்போது அந்த நடிகரின் காதலியாக இருக்கும் பெண் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் அவர்களின் கைவசம் இருந்தாராம்.
இந்த காதல், பணத்தாசையால் வந்ததா? என அந்த நடிகரின் மீது கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் அந்த நடிகர் தனது குழந்தையை பற்றி அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து சிம்பதி கிரியேட் பண்ணி கொள்கிறார் என கோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இப்படி வருத்தப்படும் அந்த நடிகர், தற்போதைய காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப் படங்களை வெளியிடுவது சரியா? எனவும் அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்துள்ளன. சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா..
