Tamil Cinema News | சினிமா செய்திகள்
2020ஆம் ஆண்டு முரட்டுத்தனமாக உடலை ஏற்றி இறக்கிய 8 நடிகர்கள்.. இணையத்தை மிரள விட்ட புகைப்படங்கள்

சினிமா கதைக்கு ஏற்றவாறு உடல் இடையை ஏற்றியும் இறக்கியும் பிரபலங்கள் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து பாதி நேரத்தை செலவிடுகின்றனர். இப்படி உடல் எடையை குறைத்து மெருகேற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு மிரள விட்டனர். தற்போது அந்த வரிசையில் 8 பேர் கொண்ட முழு லிஸ்டை பார்க்கலாம்.
பரத் – ஸ்பைடர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பரத்திற்கு மீண்டும் வில்லன் கதாபாத்திரம் வந்துவிடுமோ என நினைத்து நேரத்தில் காளிதாஸ் படத்தில் ஹீரோவாக நல்ல வரவேற்பை கிடைத்தது. அதனால் சினிமா முன்னணி கதாநாயகனாக வருவதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கூட பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை மிரள விட்டார்.

bharath
அதர்வா – பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதர்வா. அதன்பிறகு இவர் நடித்த இமைக்காநொடிகள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கைவசம்மாக தள்ளி போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்தை மற்றும் ருக்குமணி வண்டி வருது போன்ற படங்கள் வைத்துள்ளார். இப்படத்திற்காக இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டார்.

atharvaa
ஆர்யா – ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான காப்பான் திரைப்படம் வெற்றி அடைந்தது. ஆனால் ஆர்யாவிற்கு இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் எந்த ஒரு புகழும் கிடைக்கவில்லை. தற்போது ஆர்யா கடின உழைப்பால் சர்பட்ட பரம்பரை என்ற படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளோ ரிஸ்க் எடுத்துருக்கீங்க என அசந்து போனார்கள்.
அருண் விஜய் – அருண் விஜய் பொருத்தவரை எப்போதுமே தனது உடல் கட்டுக்கோப்பாக வைப்பதில் கவனம் செலுத்துபவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாபியா படத்திலும் சிக்ஸ் பேக்குடன் நடித்து இப்படமும் வெற்றி பெற்றது. இவர் படப்பிடிப்பில் அதிகமாக இருப்பதை விட ஜிம்மில் அதிகமாக தனது நேரத்தைச் செலவிடுவார். தற்போது பாஸ்கர் படத்திற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார்.

arun vijay
மகத் ராகவேந்திரா – அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மகத். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் தெரியக்கூடிய ஒரு நாயகனாக வலம் வந்தார். ஆனால் எந்த ஒரு படத்திலும் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அதற்காக சிக்ஸ் பேக் வைப்பதற்கு முடிவு செய்தார். இதன் மூலம் ஹீரோவாக படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார்.

mahat raghavendra
ஆர் கே சுரேஷ் – தாரை தப்பட்டை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிடித்த வில்லனாக சினிமாவில் வலம் வருபவர் ஆர் கே சுரேஷ். இவர் மருது, தர்மதுரை, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் புதிய முகம். இவர் முன்பு உடல் எடையுடன் கூடிய புகைப்படத்தையும் தற்போது உடல் எடை குறைத்த புகைப்படத்தையும் ஒன்றாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

rk suresh
நகுல் – பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நகுல். தற்போது இவர் எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிகிறது. தற்போது இவரும் உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

nakkhul
சூர்யா – சூரரைப்போற்று படத்தில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடல் எடையை ஏற்றியும் இறக்கியும் சூர்யா தனது கடின உழைப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தில் சுதாகர் அவற்றை மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று தான் கூற வேண்டும்.

soorarai-pottru-cinemapettai
