தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்கள் என பிஸீயாக நடித்து வருகிறார் தமன்னா. தற்போது இவர் பிரபாஸ் நடிக்கும் காமோஷி இந்தி படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் தமன்னா இல்லத்தில் கல்யாணக் கொண்டாட்டம் கலைகட்டி உள்ளது.

மும்பையை பூர்வீகமாக கொண்ட தமன்னாவின் பெற்றோர் வைர நகைக்கடை வைத்துள்ளனர். தமன்னா தான் வீட்டின் மூத்த பிள்ளை. அவருக்கு ஆனந்த் பாட்டியா என்ற பெயரில் ஒரு தம்பி உள்ளார் . இந்த நிலையில் தமன்னாவின் தம்பிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இதனைதொடர்ந்து மெஹந்தியால் தன்னை அழகு படுத்திக் கொண்ட புகைப்படங்களையும், உற்சாகத்தில் நடனமாடும் புகைப்படங்களையும் தமன்னா தனது இண்ட்ஸாகிராமில் பதிவேற்றி உள்ளார். குடும்பத்தினருடன் இருக்கும் நேரமே மிகச்சிறந்த தருணம் என அவர் புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.