fbpx
Connect with us

Cinemapettai

கிராமத்துப்பெண்ணாக மாறிய தமன்னா?

Celebrities | பிரபலங்கள்

கிராமத்துப்பெண்ணாக மாறிய தமன்னா?

Tamanna Plays Vilalge Girl - DharmaDuraiதேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வரும் ‘தர்மதுரை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவேதா ஆகிய நான்கு நாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று முதல் தமன்னாவின் காட்சிகள் படமாக்கப்படவிருப்பதால் விஜய்சேதுபதியுடன் தமன்னாவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இன்றைய படப்பிடிப்பு தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறவுள்ளது. தமன்னா இந்த படத்தில் மதுரை அருகே உள்ள கிராமத்து பெண்ணாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்கின்றது. சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top