Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்கு எல்லா படமும் வேணாம்.! ஆள விடுங்க.. மனம் திறந்த தமன்னா

நடிகை தமன்னா தனக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் திடீரென மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. ஒல்லியான தேகம், வெள்ளை அழகு என முதல் படத்திலேயே அவருக்கு வரவேற்புகள் அதிகமாக கிடைத்தது. இதை தொடர்ந்து, கோலிவுட்டில் கேடி படத்தில் வில்லியாக அறிமுகமானார். ஆனால், அவரின் வில்லத்தனம் கூட ரசிக்கும் படியாக அமைந்ததால், ரசிகர்களிடம் படாரென ஒட்டிக்கொண்டார். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படம் தமன்னா திரை வாழ்வில் புது அங்கீகாரத்தை பெற்று தந்தது. தொடர்ந்து, நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.
இதன்மூலம், பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக தமன்னா பெயர் பெற்றார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி இமாலய வெற்றியை பெற்றது. அவந்திகாவாக இவர் நடிப்பினை பாராட்டாத ரசிகர்களே இல்லை. இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகள் இல்லை என்றாலும் பாகுபலி படத்தால் தமன்னா தனது திரை வாழ்வில் புதிய முத்திரையை படைத்தார். இந்த வருடம் விக்ரமுடன் இணைந்து நடித்து வெளிவந்த ஸ்கெட்ச் படத்தில் நடித்தார். தொடர்ந்து, தற்போது மூன்று மொழிகளில் தயாராகும் சை ரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். குயின் படத்தின் ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்திலும் நாயகியாக நடித்து முடித்து விட்டார்.
இந்நிலையில், தமன்னா தனக்கு வரும் வாய்ப்புகளை திடீரென மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து, மனம் திறந்து இருக்கும் தமன்னா, கடந்த பல வருடங்களாக இடைவிடாது படங்களில் நடித்து வந்துள்ளேன். சிறிய ஓய்வு தேவைப்பட்டது, அதனால் என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தனக்கு பிடித்த கதை மற்றும் கதாபாத்திரங்களை கொண்டு ஓகே சொல்லிவிடுவதாக தெரிவித்து இருக்கிறார்.
