Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமன்னா வோட ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதானாம்! என்னன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!
ஒரு நடிகையைப் பற்றி எத்தனையோ கிசுகிசுக்களை தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தாலும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது ஒன்றும் தவறில்லையே. மற்றவர்களிடம் நல்லவற்றை கற்றுக் கொள்வது போல் இவர்களிடமும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கலாம். அதில் ஒன்றுதான் ஆரோக்கியம்.
பொதுவாக சினிமா உலகத்தில் ஆரோக்கியம்தான் முதல் அடிப்படையான தேவையே. அதற்காக அவர்கள் பல வழிகளிலும் மெனக்கெடுவதுண்டு. அதில் அவர்களின் முக்கியத் தேடல் இயற்கையான உணவு மற்றும் இயற்கை அழகுக் சாதனங்களை நாடுவது.
தமன்னா நடிக்க வந்து 10 வருடங்கள் ஆனாலும் இன்னும் அப்படியே உடலை ஒரே மாதிரி ஃபிட்டாக வைத்திருப்பது ஆச்சரியமான விஷயமே. அப்படி தன்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அவர் என்ன செய்கிறார் என ஆர்வம் இருந்தால் தொடர்ந்து படியுங்கள்.
அதிகாலை :
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிப்பது மற்றும் 6 ஊறவைத்த பாதாம்.
காரணம் :
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதால் முந்தைய நாள் சாப்பிட்ட உணவுகளின் நச்சுத்தன்மை முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
பாதாம் நல்ல கொழுப்புகளிய உடலில் சேர அனுமதிக்கிறது. உடலில் செல்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
காலை :
இட்லி / தோசை / ஓட்ஸ் என விருப்பத்திற்கு தகுந்த மாதிரி எடுத்துக் கொள்கிறார்.
காரணம் :
காலையில் அதிக கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்வதால் நாள்முழுவதும் தேவையான எனர்ஜி தருகிறது. அவற்றோடு சாப்பிடப்படும் சட்னி சாம்பார் தேவையான புரதம் மற்றும் விட்டமின்களை தருவதால் உடலுக்கு அன்றைய தேவையான சத்தினை பெறச் செய்கிறது. ஓட்ஸ் பசியை கட்டுப்படுத்தும். ஹார்மோனை சமன்படுத்தும்.
மதியம் :
1 கப் பிரவுன் சாதம்- பருப்பு துவையல் மற்றும் காய்கறிகள்.
காரணம் :
இந்த மூன்றின் கலவை சத்துக்களை சமன்படுத்துகிறது. இதனால் உடலில் எந்தவித சத்துக்களின் பற்றாக்குறையில்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். பசியை தூண்டாத மிதமான உணவு.
இரவு :
சிக்கன் /மீன்/ முட்டையின் வெள்ளைக் கரு / வேக வைத்த கீரை
காரணம் :
இரவுகளில் புரத உணவுகளை உண்பதால் எளிதில் ஜீரணிக்கும். சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என நம்புகிறார்.
பின்பற்றும் இதர விஷயங்கள் :
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கிறார். தினமும் 3 லிட்டர் நீரை குடிக்கிறாராம். ஃப்ரெஷான பழச் சாறுகள் மற்றும் இள நீரை விரும்பி குடிக்கிறார். முக்கியமான வீட்டில் செய்ப்படும் உணவுகளையே விரும்புவாராம். அதோடு தவறாமல் உடற்ப்யிற்சிகள் மற்றும் யோகா செய்கிறார் என தமன்னா தெரிவித்துள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
