Connect with us
Cinemapettai

Cinemapettai

tamannaah-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தீவிர சிகிச்சையில் நடிகை தமன்னா? காரணம் தெரியாமல் பதட்டத்தில் ரசிகர்கள்

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் தமன்னா அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு விட்டார்.

தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க சமீபகாலமாக OTT தளங்களில் வெப் சீரிஸ் பயங்கர பேமஸ் ஆகி வருவதால் அதிலும் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தார் தமன்னா.

அதற்கான படப்பிடிப்புகளுக்காக ஹைதராபாத் வந்த போது அவருக்கு திடீரென காய்ச்சல் வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரானா இருப்பது தெரியவந்தது.

எனவே தமன்னாவின் தந்தை மற்றும் அவரது தாயார் இருவரும் சமீபத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து தான் தமன்னாவுக்கு இந்த தொற்று பரவியுள்ளதாம்.

tamannaah-cinemapettai

tamannaah-cinemapettai

இருந்தாலும் தமன்னாவுக்கு கடந்த சில மணி நேரமாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது.

Continue Reading
To Top