fbpx
Connect with us

Cinemapettai

நல்ல மாப்பிள்ளையை பெற்றோரை விட வேறு யாராலும் தேர்வு செய்ய முடியாது – தமன்னா

News | செய்திகள்

நல்ல மாப்பிள்ளையை பெற்றோரை விட வேறு யாராலும் தேர்வு செய்ய முடியாது – தமன்னா

Tamannaah-Speaks About His Marriageநடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் சினிமாவை விட்டு ஒதுங்கி சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள். இன்னும் சிலர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இந்த நிலையில் காதல் திருமணங்கள் சிறந்ததா? என்பதற்கு நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகை தமன்னா கூறியதாவது:- காதல், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையில் இருக்கிறது. இருவரும் விட்டுக்கொடுக்கணும் நான் உயர்ந்தவர் நீ தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்க கூடாது.

ஒருவரையொருவர் மதிக்கணும். இதுமாதிரி யார் இருக்கிறார்களோ அங்கு காதல் இருக்கும். எனக்கு இதுவரை காதல் வரவில்லை. காதலிக்க நேரமும் இல்லை. எனக்கு பொருத்தமானவர் யார், அவர் எங்கு இருக்கிறார்? என்று சிந்திக்கவும் நேரம் இல்லை. ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

எனவேதான் எனக்கு கணவராக வருபவரை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோரிடம் விட்டு விட்டேன். நல்ல மாப்பிள்ளையை அவர்களை விட யாராலும் தேர்வு செய்ய முடியாது. எனக்கு பொருத்தமானவரை அவர்கள் தேர்வு செய்வார்கள். அம்மா, அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top