பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இதன் புதியகட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

பாகுபலியில் புரட்சி வீரராக நடித்து அசத்திய தமன்னா, இதன் இரண்டாம் பாகத்திலும் அதே வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூலையில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறவுள்ளது அதுவரை தமன்னா வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் எனவும் சொல்லப்படுகிறது.