fbpx
Connect with us

Cinemapettai

இணையதளத்தில் பட்டைய கிளப்பும் தமன்னாவின் கிளாமர் புகைப்படங்கள்

இணையதளத்தில் பட்டைய கிளப்பும் தமன்னாவின் கிளாமர் புகைப்படங்கள்

Tamannaah-Thozha-Oopiri-Hot-Photosதமன்னா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் தங்கமென மின்னி வரும் நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் சில காலம் காணாமல் போனவர் பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் மூலம் மீண்டும் வந்தார். பாகுபலியில் கிடைத்த பெயரை வா.ச.ஒ.ப படத்தில் கொஞ்சம் இழந்தார். இருந்தாலும் தோழா படம் தமிழில் தன்னை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு வரும் என நம்பிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் தமன்னா ஆடை விஷயத்தில் தாராள மனதுடன் நடித்துக் கொடுத்திருக்கிறாராம்.

மிகப் பெரும் கோடீஸ்வரரான நாகார்ஜுனாவின் செக்ரெட்டரி கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். அதனால், அவருடைய ஆடைகள் அனைத்தும் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இயல்பாகவே வெள்ளை வெளேர் என இருக்கும் தமன்னாவை இதுவரை பார்த்திருக்காத தோற்றத்தில் இந்தப் படத்தில் பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.

கடந்த சில நாட்களாக இந்தப் படத்தில் தமன்னா நடித்துள்ள கதாபாத்திரத்தின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் வெளிவருவதால் தோழா படம் வந்த பிறகு ஸ்ருதிஹாசன், சமந்தா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மற்ற நடிகைகளை தமன்னா எளிதில் பின்னுக்குத் தள்ளிவிடுவார் என்கிறார்கள்.

தோழா யாருக்குத் தோள் கொடுக்கிறதோ இல்லையோ தமன்னாவிற்குச் சரியாகத் தோள் கொடுப்பது நிச்சயம் என்கிறது படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top