Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹாலிவுட் செல்லும் பார்த்திபன்.. வைரலாகுது மனிதரின் லேட்டஸ்ட் ட்வீட்
Published on
பார்த்திபனும் – புதுமையும் உடன் பிறவா சகோதர்கள் தான். புதிய பாதையில் ஆரம்பித்து இன்று ஒத்த செருப்பு வரை வந்துள்ளார். OS 7 படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து மற்றும் அவரே நடித்தும் இருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அதிக விருதுகளையும் குவித்தது இப்படம். ஆஸ்கார் வாங்கும் தகுதி பெரும் லிஸ்ட் வரை இடம் பிடித்தது இப்படம்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், பார்த்திபனை ஜாம்பவான் மார்ட்டின் ஸ்கார்சே அவர்களுடன் ஒப்பிட்டார். மேலும் ஹாலிவுட் தயாரிப்பாளரை சந்தித்து, இப்படத்தை ஆங்கிலத்தில் எடுக்க வேண்டும் என கூறினார்.
Thanks
already d talks is going on der https://t.co/vqREhVvJ5l— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 13, 2020
நம் இயக்குனரும் பேச்சுவார்த்தையில் உள்ளது, நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.
