கண்ணீருடன் பேட்டி கொடுத்த இந்திய வீரர்.. தம்பி நீங்க கொஞ்சம் வெயிட் குறைக்கணும், ஆட்டிட்யூட் மாத்தணும்

இந்திய அணியில் ஒரு வீரர் விளையாட வில்லை என்றால் அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கேள்விக்குறிதான். அதிக அளவு எண்ணிகையில் இந்திய அணியில் அதிரடி ஆட்டம் விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் பலர் இருக்கின்றனர்.

இப்பொழுது இந்திய அணியில் மூன்று விதமான போட்டிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வீரர்களை தவிர, மூன்று வெவ்வேறு அணிகள் விளையாடி வருகிறது. ஷிகர் தவான் தலைமையில் ஒரு அணி, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதேபோல் 20 ஓவர் போட்டிகளிலும், மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் ஒருவிதமான வீரர்கள் விளையாடுவார்கள்.

Also read: சென்னை அணி கோப்பை வெல்ல கமலே காரணம்.. சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டன் கூறிய தகவல்

இந்நிலையில் திறமையான இளம் இந்திய வீரர்கள் பலர் வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இப்படி மூன்று விதமான போட்டிகளுக்கு வெவ்வேறு அணி இருந்தாலும் கூட இன்னும் பல வீரர்கள் வெளியில் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளது இந்திய நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு.

வெங்கடேச ஐயர், பிரிதிவ் ஷா போன்ற வீரர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களும் பல போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்து காட்டினாலும் இவர்களின் வாய்ப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து இளம் துவக்க வீரர் பிரிதிவ் ஷாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் இந்திய ஏ அணியில் விளையாடி வருகிறார்.

Also read: முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நன்றாக விளையாடினார். உள்ளூர் போட்டிகளிலும் மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இருந்தாலும் இந்திய அணியில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அவரது உடல் எடை. அவர் உயரத்தில் கொஞ்சம் கம்மி, அதனால் அவரது உடல் எடை உயரத்திற்கு ஏற்றாற்போல் இல்லை என ஒரு குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதேபோல் அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார், அவருடைய கேரக்டரை மாற்றவேண்டும் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இப்பொழுது அவர் தனது உடல் எடையையும் குறைத்து விட்டார் இருந்தாலும் அவருக்கு நல்ல வழி பிறந்த மாதிரி தெரியவில்லை.

Also read: ஜொள்ளு விடவைக்கும் 5 கிரிக்கெட் தொகுப்பாளர்கள்.. அரேபிய குதிரை போல் காட்சியளிக்கும் மாயந்தி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்