Videos | வீடியோக்கள்
கிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்
Published on
குழந்தைகளை மிகவும் நேசித்த பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அவரைஅடுத்து, நமது மறைந்த முன்னாள் ஜனாதிபதி பாசத்திற்குரிய திரு அப்துல் கலாம் அய்யா அவர்கள் குழந்தைகளை வெகுவாக நேசித்தார்.
அவ்வழியில், குழந்தைகளை மிகவும் ரசித்துபோற்றும், ‘நகைச்சுவை அரசர்” திரு. கிரேசி மோகன் அவர்களின் வரிகளுக்கு, இசை அமைப்பாளர் குரு கல்யாண், ‘டேக்திங்ஸ் ஈஸி” என்ற பாடலை குழந்தைகள் தினத்தன்று (நேற்று) வெளியிட்டுள்ளார். குழந்தைகளின் கலைத்திறன் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த காணொளி அனைவருக்கும் சிறந்த பொழுது போக்காக அமையும்.
