Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியாக இருக்கிறது டைட்டானிக்-2.! அதே பயணம்.! அதே பாதை.!
பல வருடங்களுக்கு முன்பு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக்-1 கப்பலை போல் அதே உருவத்தில் டைட்டானிக்-2 கப்பல் உருவாக்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் டைட்டானிக் கப்பல் பயணித்த அதே பாதையில் தான் இந்த டைட்டானிக்-2 கப்பலும் செல்ல இருக்கிறது வருகின்ற 2022-ம் ஆண்டு இந்த கப்பல் வெற்றிகரமாக இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்கள்.
டைட்டானிக் கப்பல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்தில் சவுத்தாம்டன் இருந்து நியூயார்க் நகரம் வரை புறப்பட்டது ஆனால் கப்பல் புறப்பட்ட 5 நாட்களிலேயே அட்லாண்டிக் கடல்பகுதியில் பனி மலையில் மோதி அங்கேயே மூழ்கியது இந்த கப்பலில் பயணித்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களில் 1500 பேருக்கு மேல் மரணமடைந்ததாக கூறுகிறார்கள்.
இந்த டைட்டானிக் கப்பல் மூழ்கியதை வைத்து ஒரு ஹாலிவுட் படம் எடுத்தார்கள், அந்த டைட்டானிக் படம் உலக அளவில் வசூலை வாரி குவித்தது, கடலில் மூழ்கிய டைட்டானிக்-1 கப்பலைப் போல மிக பிரமாண்டமாக டைட்டானிக் 2 கப்பல் உருவாக்கப்பட்டு வருகிறது இந்த டைட்டானிக்-1 கப்பல் பயணித்த அதே பாதையில்தான் டைட்டானிக்2 கப்பல்ப யணிக்க இருக்கிறது.
இந்த கப்பலை ப்ளூ ஸ்டார் நிறுவனம் தயாரித்து வருகிறது சீனாவில் தயாரித்து வரும் இந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டுகப்பல் சவுத்தாம்டன் வந்து நியூயார்க் புறப்பட உள்ளது. டைட்டானிக்-1 புறப்பட்டு 5 நாட்களிலேயே மூழ்கியதால் இந்த கப்பலில் நவீன வசதிகளும், நவீன தொழில்நுட்பங்கள் சிறப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது, 21ம் நூற்றாண்டில் சிறப்பு அம்சங்கள் பொருந்திய டைட்டானிக்2 கப்பல் இதுதான் என்ற பெருமையை அடையும்.
டைட்டானிக்-2 கப்பலில் ஏறக்குறைய 2400 பயணிகள், 900 கப்பல் பணியாளர்கள் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கப்பலை 2018 வெள்ளோட்டம் பார்க்க திட்டமிட்டிருந்தோம் ஆனால் நிதி பற்றாக்குறையால் அது முடியாமல் போனது மேலும் இந்த கப்பலின் ஒட்டு மொத்த செலவு 50 கோடி டாலர், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.
