ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இம்ரான் தாஹிர். ஏன் தெரியுமா ?

40 வயதை கடந்தாலும், இவர் பந்து வீச்சின் வீரியம் குறையவில்லை, நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே தான் செல்கிறது. மனிதர் சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு ஆடுவதால், மண்ணின் மைந்தன் ஆகிவிட்டார். மேலும் பராசத்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்ல அடைமொழியும் பெற்று விட்டார். சி எஸ் கே போட்டி வென்றால், எந்த சூப்பர் ஸ்டார் ஸ்டேட்டஸ் இவர் பதிவிடுவார் என பலரும் ஆர்வமாக இருப்பர்.

இந்நிலையில் இவரின் பென்சில் ஸ்கெட்ச் ஒன்றை ரசிகர் ட்விட்டரில் ஷேர் செய்தார். அதற்கு தான் தாஹிர் பதில் தட்டியுள்ளார்.

“உங்கள் அன்புக்கு நான் அடிமை. அதிக நேரம் எடுத்திருக்கும் இதனை வரைய என்று யூகிக்க முடிகிறது. இன்றைய போட்டியில் நான் சிறப்பாக பந்து வீசவில்லை. என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நான் சிறப்பாக செயல்படுவேன்” என தட்டியுள்ளார்.

அன்பான சென்னை ரசிகர்கள் தாஹிரின் தன்னடக்கத்தை பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment