tamannaah-cinemapettai

பயத்தையும் பரபரப்பையும் பற்றவைத்த தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் ட்ரைலர்.. திக்கு திக்குனு இருக்குப்பா!

கமர்ஷியல் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த தமன்னா(Tamannaah) தற்போது ரூட்டை மாற்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் தேவி, பெட்டர்மாஸ் போன்ற படங்கள் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது வெப்சீரிஸில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். அந்தவகையில் இந்திரா சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த வெப்சீரிஸை ஆனந்த விகடன் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமன்னாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அவன் இவன் ஜிஎம் குமார், பசுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர்.

ட்ரெயிலரின் ஆரம்பத்திலேயே ஒரு பெண் பேனாவால் குத்தி கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது போலவும், கொல்லப்பட்ட தடயங்களை பெயிண்ட் ஊற்றி அழிக்க முயற்சி செய்ததும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் அந்த கொலையை தமன்னாவின் தந்தையாக நடித்த ஜிஎம் குமார்தான் செய்தாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவது போல ட்ரெயிலரின் கதை நகர்கிறது. உண்மையில் அந்த இளம்பெண்ணை கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்க தமன்னா களத்தில் இறங்குகிறார்.

ஆக மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நவம்பர் ஸ்டோரீஸ் என்று வெப்சீரிஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வருகின்ற மே 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.