பாகுபலி படங்களுக்கு பிறகு இந்தியாவை கொண்டாடும் இயக்குனராக மாறியுள்ள ராஜமவுலி இயக்கத்தில் அடுத்ததாக ரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR) என்ற படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வந்தது. கடந்த அக்டோபர் மாதமே வெளியாக வேண்டிய திரைப்படம் குரானா சூழ்நிலை காரணமாக அடுத்த வருட ஜனவரிக்கு தள்ளிச் சென்றது.
இந்த படத்தில் தெலுங்கு டாப் நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆலியா பட் அஜய்தேவ்கன் போன்ற பாலிவுட் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாகுபலியில் கட்டப்பா கதாபாத்திரத்தின் பெயர் வாங்கிய சத்யராஜ் போல இந்த படத்தில் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். சுமார் 400 கோடி பட்ஜெட் என்பதால் இந்த படம் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர்களை வைத்து இந்த படம் உருவாகி உள்ளது என ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டனர்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது எனவும் ஆனால் பாகுபலி ரேஞ்சுக்கு படத்தை எதிர்பார்த்து வரவேண்டாம் எனவும் படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கலவையாகவே உள்ளது.
இருந்தாலும் படத்தின் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள படக்குழுவினர் தற்போது RRR GLIMPSE வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.
பிரமாண்டத்திற்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் அதிரடிக்கும் பஞ்சமில்லாமல் செம விறுவிறுப்பாக வெளிவந்துள்ளது RRR படத்தின் டீசர்.