டிடெக்டிவ் ஏஜென்டாக வித்தியாசமான கதைக்களத்தில் விஜய் ஆண்டனி.. மிரட்டும் கொலை பட டிரைலர்

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் தற்போது கொலை என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிடி அண்ட் லோட்டஸ் ரெடக்ஷன் கொலை படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் இறுதிச்சுற்று பட நடிகை ரித்திகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர தினம் மற்றும் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை கருத்தில்கொண்டு கொலை படத்தின் டிரைலரை இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

ஒரு கொலையை மையமாக வைத்து இப்படத்தின் கதை நகர்கிறது. இதில் கொலைக்கான காரணத்தை விஜய் ஆண்டனி துப்பறிகிறார். ஹாலிவுட் படத்தைப் போன்ற கொலை படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.