dhanush

சினிமாவில் 17 வருட கடின உழைப்பால் உலக புகழ்ப்பெற்ற தனுஷ்

2002 ஆம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தனுஷ். ஆனால் சினிமாவில் எளிமையான முறையில் அறிமுகமானாலும் அவர் கடந்து வந்த பாதையை கரடுமுரடான தான் ஏனென்றால் ஆரம்ப காலத்திலேயே இவரது உடல் தோற்றமும் இவரது நடிப்பை பார்த்து பலரும் விமர்சித்து வந்தனர்.

மேலும் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்தார். அதன்பிறகு புதுப்பேட்டை இவரது திரை வாழ்க்கையில் திரும்பி பார்க்க வைத்த ஒரு படம் ஆகும்.

அதன் பிறகு இவர் நடித்த பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம் , 3 , மரியான், மாரி, வடசென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவருக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த திரைப்படம் ஆடுகளம். முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தனுஷிடம் நீங்கள் என்றாவது தேசிய விருது வாங்குவேன் என நினைத்தீர்களா என கேட்டபோது அதற்கு தனுஷ் ஆரம்பகாலத்தில் என்னை பலரும் விமர்சித்தனர்.

அப்போது நான் தேசிய விருது வாங்குவேன் என்று கூறினால் பலரும் சிரித்திருப்பார்கள். நான் அன்று கூறவில்லை ஆனால் இன்று நிரூபித்து விட்டேன் என கூறியிருந்தார்.

அதன் பிறகு இவர் காமெடி ,காதல், நடனம், மாஸ் என அனைத்து துறைகளிலும் கால் பதித்து அதுமட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பது, பாடல் வரிகளை எழுதுவது, படத்தை இயக்குவது என்ற போன்ற பல துறைகளிலும் பணியாற்றி தற்போது சாதித்து வருகிறார்.

இவர் இயக்கிய முதல் திரைப்படம் ராஜ்கிரண் நடிப்பில் உருவான ‘பவர் பாண்டி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது, இவரது திரை வாழ்க்கையில் ஒரு சிறிய தொகுப்பு இதுதான்.