விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5ல் வாரங்கள் கடந்து தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளார்கள். இந்த வாரம் கேப்டன் டாஸ்கில் அபிநய் வெற்றி பெற்றார். இசைவாணி தன்னுடைய காயினை பயன்படுத்தி அபிநயிடம் இருந்து கேப்டன் பதவியை தட்டிப் பறித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்கில் நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்க் கொடுக்கப்படுகிறது. பல சண்டைகள் உடன் இப்போட்டி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இங்க வாரம் ஆகாய நாணயம் வாரம் என்பதால் லிவிங் ஏரியா முழுவதும் பாவணி கட்டுப்பாட்டில் உள்ளது.
லிவிங் ஏரியாவில் வேறு யாராவது நுழைய வேண்டுமென்றால் பாவணி சொல்லும் டாஸ்கை செய்து முடிக்க வேண்டும். அதை மீறினால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். நீருப் விதிமுறைகளை மீறியதால் அவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நீருப் தண்டனை ஏற்க மறுக்கிறார்.
இதற்கிடையே இன்றைய ப்ரோமோவில் நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்க் இல் விளையாடுவதற்காக அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிறந்த பிளேயர் அவார்ட் நீருப்க்கு கொடுக்கப்படுகிறது. நீருப், ஐக்கி உடன் நெருங்கி பழகுவதால் பிரியங்கா கோபமடைகிறார்.
இதனால் இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் கேமராவைப் பார்த்து பிரியங்கா குமுறுகிறார். முதல் நாளில் இருந்து என்னுடைய நண்பன் நீருப் என்றும் எனக்கு இது பிடிக்காது என்று தெரிந்தும் அதையே செய்கிறான். ஐக்கி பற்றி குற்றம் சொல்ல முடியாது. அவளுடைய வேலையை அவள் நல்லா பாத்து இருக்கா என்று கேமராவை பார்த்து பிரியங்கா புலம்புகிறார்.
ஐக்கி என்னை ஜெயிக்க வைத்து விட்டாள் என பிரியங்காவிடம் நீருப் சொல்கிறார். கடைசியில் என்ன நடக்கும், உங்களுடைய ரிலேஷன்ஷிப் என்ன என பிரியங்கா கேட்கிறார். ஐக்கி என்னுடைய பிரண்ட் என நீருப் சொல்ல அப்ப நான் யார் என்று பிரியங்கா கேட்கிறார். நீருப்பின் பாசத்திற்காக பிரியங்கா ஏங்குவது போல் இருந்த புரோமோ இருந்தது.