siva-shirin

சிவகார்த்திகேயனின் NNOR இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஷெரினின் புகைப்படங்கள்.!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்தி வேணுகோபால் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

இப்படத்தில் ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர் மற்றும் ஷெரின் எனும் புதுமுக நடிகையை அறிமுக படுத்தியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ திரைப்படம்  விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் கதாநாயகி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகின்றது.