valimai

நான் கேம் ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆச்சு தம்பி.. ஹாலிவுட் தரத்தில் வெளிவந்த வலிமை படத்தின் வீடியோ

அஜித் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்காக ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் சிங்கிள் அப்டேட்டிற்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி வந்த நிலையில் அதிரடியாக படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது.

இருப்பினும் படம் எப்போது வெளியாகும் என்பதை ரசிகர்கள் அனைவரின் ஒரே கேள்வியாக உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனவே விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் குறித்த தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், திடீரென தயாரிப்பு தரப்பில் வலிமை படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பொங்கலுக்கு ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் படம் வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது வலிமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வலிமை படத்தின் ஒரு சில காட்சிகளை 1.26 செகண்ட் இருக்கும் வீடியோ இன்று  வெளியிட்டுள்ளனர். ஹாலிவுட் தரத்தில் வெளிவந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.