asuran-dhanush

சம்பவம் பண்றோம்.. தனுஷ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சுருளி என்று பெயரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  எப்போது வெளிவரும் என்பதை பிப்ரவரி 9ஆம் தேதி அறிவிப்போம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் சேர்ந்து தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ணன் என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் திருநெல்வேலி மாவட்டத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்தி நடிகை சாரா நடித்து வருகிறார்

இதற்கிடையில் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை மீறி ஒருசில போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.  இந்த போஸ்டர்களை பார்க்கும்போது ஒரிஜினல் போஸ்டரை தோற்று விடும் அளவிற்கு இருக்கிறது.

suruli-1
suruli-1
suruli
suruli

D40 படம் மே1 வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உழைப்பாளர்கள் தினம் மட்டுமல்லாமல் தல அஜித்தின் பிறந்த நாள் என்று கூறலாம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 2022 வரை தனுஷ் ரொம்ப பிசியாக இருப்பதால் கால்சீட் கிடைக்காதாம். வெற்றிமாறனின் வடசென்னை 2  படம் கூட எடுப்பதற்கு சில வருடங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.