அழுக்கு புடவையிலும், மண் படிந்த முகத்துடனும் அன்மையில் ரிலீசாகி எல்லார் மனதையும் கொள்ளை அடித்த பக்ரீத் படத்தின் நாயகி வசுந்தரா புடவையில் ஜம்மென்று போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
நடிகை வசுந்தரா, விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஹிட் படங்களில் நடிக்கவில்லை. ஜெயம்ரவியுடன் நடித்த பேராண்மை படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகு மிர்ச்சி சிவா, விக்ராந்த் என பலருடனும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நீண்டகாலமாக ஒரு நல்ல வெற்றிக்கு காத்துக்கொண்டிருந்த வசுந்தரா, பக்ரீத் படத்தின் வெற்றியின் மூலம் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். அதே சந்தோஷத்தில் அழகான புடவையில் அற்புதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் உலாவ விட்டிருக்கிறார். புகைப்படங்கள் கீழே:-


