mogan g-selvaragavan

விழிப்புணர்வு என்ற பெயரில் ஓவர் ஆட்டம் போடும் பகாசூரன் மோகன்.. சட்ட சிக்கலில் மாட்ட வைக்க குவியும் கண்டனங்கள்

விழிப்புணர்வு என்ற பெயரில் ஓவராக ஆட்டம் போடும் இவரை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும் என்ற கண்டன குரல்கள் இப்போது எழுந்துள்ளது.

வாத்திக்கு போட்டியாக அழுத்தமான மெசேஜ் சொன்ன பகாசூரன்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

செல்வராகவன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பகாசூரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம்.

Bakasuran-Trailer

முழு சைக்கோவாக மாறிய செல்வராகவன்.. பல உண்மை சம்பவங்களை புட்டு புட்டு வைக்கும் பகாசூரன் ட்ரெய்லர்

திரௌபதி, ருத்ரதாண்டவம் என மற்ற இயக்குனர்கள் தயங்கும் படத்தை தைரியமாக எடுக்கக் கூடியவர் இயக்குனர் மோகன் ஜி. தற்போது இயக்குனர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இதில் செல்வராகவன் ஒரு ரவுடியாகவே தனது வாழ்க்கையை வாழ்கிறார். கிட்டத்தட்ட 52 வருடங்கள் தாண்டியும் பெண் வாடை இல்லாமல் இருக்கும் செல்வராகவனுக்கு இளம் பெண்ணை அடைய வேண்டும் என்கிறார்.

Also Read : புது அவதாரம் எடுத்த செல்வராகவன்.. மொத்த கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்

ஆனால் அடுத்தடுத்து இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவ்வாறு வீட்டில் தனி அறையில் பெண்கள் என்ன செய்கிறார்கள், அதை கவனிக்க ஏன் பெற்றோர்கள் தவறுகிறார்கள் என்பதை பற்றிய படமாக பகாசூரன் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணத்திற்குப் பிறகு சில பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்வதைப் பற்றியும் இந்த படத்தில் மோகன் ஜி பேசியுள்ளார். கண்டிப்பாக பகாசூரன் படம் வெளியாகும் போது பல பிரச்சனைகளை சந்திக்க கூடும் என்பதை இந்த ட்ரெய்லரை வெளிப்படுத்தி உள்ளது.

Also Read : ஒரே படத்தால் 12 வருட கடனில் தவித்த செல்வராகவன்.. 2ம் பாகம் எடுக்காததன் காரணம் இதுதான்

பகாசூரன் படம் இப்போதுள்ள இளைய சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் மிகவும் ஆழமாக உள்ளது. இப்படத்தில் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : மொத்தமாக சொரிஞ்சுவிட்ட செல்வராகவன், தோல்விக்கு இதான் காரணம்.. தனுஷ் ரசிகர்கள் கூட கொண்டாடாத நானே வருவேன்

மீண்டும் பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் மோகன் ஜி.. பகாசுரனில் மிரட்டும் செல்வராகவன்

மோகன் ஜி மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படங்களை தொடர்ந்து கொடுத்த வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் கடுமையான விமர்சனங்களை எழுந்த போதிலும் மக்கள் ஆதரவளித்து வந்தனர்.

தற்போது மோகன்ஜி செல்வராகவனை கதாநாயகனாக வைத்து பகாசுரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் டீசரும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதில் சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Also Read :டாப் 10 இயக்குனர்களின் முதல் படத்தின் மொத்த லிஸ்ட்.. மணிரத்னம் முதல் அட்லீ வரை

இப்படம் அடுத்தடுத்து மர்மமான கொலைகள் நடந்து வருகிறது. இதற்கான காரணத்தை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக நட்டி நடராஜன் நடித்துள்ளார். இதில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை சீரழிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெண்களை ஆசை வார்த்தை கூறி சீரழிக்கும் நபர்களை கொலை செய்பவராக செல்வராகவன் காட்சியளிக்கிறார். மேலும் தனி அறையில் இருக்கும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்ற கருத்தை நட்டி நடராஜன் கூறியிருப்பார்.

Also Read :அடுத்த ருத்ரதாண்டவம் ஆட தயாராகும் மோகன்.. செல்வராகவனுடன் மோதப்போகும் கில்லாடி நடிகர்

இப்படம் கண்டிப்பாக தற்போது உள்ள பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கருத்தை சொல்லும் விதமான படமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்வராகவும் சாணி காகிதம் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

இந்நிலையில் செல்வராகவனின் பகாசுரன் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் மகாபாரத புராணத்துடன் தொடர்புடைய சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி குறிப்பிட்டு இருந்தார்.

Also Read :சதுரங்க வேட்டை பாணியில் 5000 கோடி சுருட்டிய மோசடி கும்பல்.. பணத்தாசையால் சிக்கிய மாதவன், சூரி