முகேன் ராவ்க்கு மலேசியாவில் காத்திருந்த அதிர்ச்சி..

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 17 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசிய வாழ் தமிழரான முகேன் ராவ் டைட்டில் பட்டத்தை வென்றார். பலரின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் நேரத்தில் சத்தமில்லாமல் சாதித்து கோப்பையை தட்டிச் சென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் சென்னையில் சக போட்டியாளர்களின் வீட்டிற்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்து வந்த முகேன், தற்போது தனது தாய்நாடான மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மலேசிய மண்ணில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தமிழக மக்களின் மனதையும் வென்று எடுத்துச்சென்ற முகேன் ராவ், மலேசியாவில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்டு வருகிறார்.

அவர் கூறிய அன்பு ஒன்றுதான் அனாதை என்ற வசனம், உண்மையிலேயே பலரின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனாலேயே அவனுக்கு தனி ரசிகர் பட்டாளம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டியாளர்களுடன் போட்டிக்கு போட்டியாக, அதே சமயத்தில் மற்றவர்களின் மேல் எடுத்துக்கொள்ளும் அக்கறையும் அவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்வதற்கு உரியவர் தான் என அச்சடிக்கப்பட்டது.

 

mugen-entry
mugen-entry