பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கான ரசிகர்களை உருவாக்கியவர் முகன் ராவ். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்த நிலையில் முகன்ராவ் கவின் இயக்கத்தில் வேலன் என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் சூரி நடித்துள்ளனர். சமீபத்தில் கூட படப்பிடிப்பு தளத்தில் முகன்ராவுடன் சூரி செய்த சேட்டைகள் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இந்த டீசரும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றனர் முகன் ரசிகர்கள்.
தற்போது வேலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் முகன்ராவ் நாற்காலியில் அமர்ந்தபடி பாரம்பரிய உடையில் கிராமத்து கதையம்சம் உள்ளது போல் தெரிய வந்தது.
முகன்ராவ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதால் இப்படத்தினை மிக பிரமாண்டமாக ஸ்கை மேன் இன்டர்நேஷனல் கலைமகன் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.