maaran

சாமர்த்தியமாக மிரட்டும் ரிப்போர்ட்டர் மாறன் பட டிரைலர்.. **த்த உன்னால என்னடா செய்ய முடியும்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாறன். இப்படத்தில் மாளவிகா மோகன் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். தற்போது மாறன் படத்தினை நேரடியாக OTT தளத்தில் வெளியிட உள்ளனர்.

தற்போது இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். உண்மையை உரக்கச் சொல்லும் ஒரு உண்மையான பத்திரிகையாளராகவும் அதனால் அவர் எந்த அளவில் பாதிக்கப்படுகிறார் என்பது போல் கதைக் களத்தை அமைத்துள்ளனர்.

அரசியல்வாதியாக சமுத்திரகனி நடித்திருக்கிறார். இவர் செய்யும் ஊழல்களை தனுஷ் எப்படி பத்திரிக்கை மூலம் இந்த உலகிற்கு காட்டுகிறார். அதனால் இவருக்கும் அவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார். மேலும் ஒரு உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு இப்படத்தினை கார்த்திக் நரேன் உருவாக்கியுள்ளார்.