‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ‘விக்ரம்’ பட வெற்றிக்கு பிறகு ‘மாமனிதன்’ என்னும் திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பின் இவர் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘DSP’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். சேதுபதி படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி இந்த படத்தில் போலீசாக நடிக்கிறார்.
‘DSP’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பல திரை பிரபலங்கள் பங்கேற்றனர். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ‘நல்லா இரும்மா’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி இருக்கிறது. வீடியோ தொடங்கும் ஒரு சில நொடிகளுக்கு விஜய் சேதுபதி ஸ்ட்ரிக்டான போலீசாக காட்டப்பட்டிருக்கிறார். பின்னர் காதல், காமெடி என கலவையாக இருக்கிறது. காவல் உடையில் மிரட்டும் விஜய் சேதுபதி ஹீரோயின் பின்னால் சுற்றுவது, காதலிப்பது என காமெடியும் செய்திருக்கிறார்.
ஊரில் உள்ள மொத்த ரௌடிகளையும் அழிக்க முடிவெடுக்கும் விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஆக்சன் கேம்களில் இறங்குகிறார். இதில் இவரின் பெயர் வாஸ்கோட காமா. பிக்பாஸ் ஷிவானி ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த படத்தில் போலீசாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் இந்த படம் குடும்ப கமர்சியல் திரைப்படம்.
Also Read: வினோத் படத்தில் ஏற்பட்ட குழப்பம்.. கமல் செய்ததை மறந்து பெரிய மனிதராக நடந்து கொள்ளும் விஜய் சேதுபதி
பொன்ராம் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் DSP திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது. இயக்குனர் பொன்ராம் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ‘சீமராஜா’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இதில் ‘சீமராஜா’ படம் படுதோல்வியடைந்தது.
நடிகர் விஜய் சேதுபதிக்கு சமீபத்திய ரிலீஸ்களான விக்ரம், கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து இருக்கின்றன. இவர்கள் இருவரது கூட்டணியில் DSP திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இப்போதைக்கு இந்த படத்தின் ட்ரெய்லருக்கு பாசிடிவ் ரிவியூக்கள் கிடைத்து கொண்டிருக்கின்றன.
Also Read: விஜய் சேதுபதி இடத்தில் மாஸ் ஹீரோவை இறக்கும் லோகேஷ்.. கைதி 2வில் செய்யப்போகும் சம்பவம்