ஏன் அடிச்சோம், எதுக்கு அடிச்சோம்னு தெரியக்கூடாது.. ரத்தக்களரியாக வெளிவந்த யானை பட வீடியோ

பல வருடங்களுக்கு பிறகு ஹரி இயக்கியுள்ள யானை படம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகி பாபு, போஸ் வெங்கட், சஞ்சீவ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொரு முறை தள்ளி போன நிலையில் தற்போது உறுதி பட ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் யானை படத்தின் பிரஸ்மீட்டில் ஹரி பேசிய போது இப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறினார்.

அதேபோல் இப்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. ஹரி படத்தில் எப்போதும் உள்ளது போல படத்தின் ஹீரோ, ஹீரோயின் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதேபோல் ராதிகாவும் தனது துணிச்சலான கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டிரைலரை வைத்து பார்க்கும்போது சமுத்திரக்கனி வில்லனாக நடித்து இருப்பார் என்பது போல தெரிகிறது. மேலும் காட்சிக்கு காட்சி அருண்விஜய் யாரையாவது போட்டு அடித்துக் கொண்டே இருக்கிறார்.

மேலும் எப்போதும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோகி பாபு யானை படத்தில் அருண்விஜய்க்கு வலது கைபோல் போல் செயல்பட்டு வருகிறார். இதனால் யானை படம் சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்சன் படமாக அமைந்துள்ளது.

எப்பொழுதும் ஹரி படத்தில் இடம்பெறும் பஞ்ச் டயலாக் போல் யானை படத்திலும் அருண் விஜய்யின் ஏன் அடிச்சோம், எதுக்கு அடிச்சோம்னு தெரியக்கூடாது என்ற டயலாக் மாசாக உள்ளது. மேலும் யானை படம் அருண் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் அருண் விஜய் யானை படத்தை ரிலீஸ் செய்துவிட்டு மற்ற படங்களை ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளார்.