regina

ஐட்டம் டான்ஸில் சமந்தாவை மிஞ்சும் ரெஜினா.. அநியாய கவர்ச்சியில் வீடியோ

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் புஷ்பா. அதிக பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக வெளியான இத்திரைப்படம் பல கோடி வசூலை பெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், டீசர்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஓ சொல்றியா மாமா என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலில் சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் சமந்தா பல சர்ச்சைகளை சந்தித்தார். ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் இந்த பாடல் இருக்கிறது என்று போர்க்கொடி தூக்கும் அளவுக்கு இந்தப் பாடல் பல பிரச்சினைகளை கிளப்பியது.

இப்படி ஒருபுறம் எதிர்ப்பு இருந்தாலும், ரசிகர்கள் பலரும் சமந்தாவின் இந்த ஆட்டத்தை மிகவும் ரசித்தனர். சமந்தா ஆடிய இந்த பாடலும் திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. தற்போது சமந்தாவின் இந்த ஆட்டத்தை பார்த்து நடிகை ரெஜினாவும் ஒரு படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் நடிகர் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் சமீப காலமாக கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ஆச்சர்யா. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஹாட் பாடலுக்கு தான் ரெஜினா கிளாமர் டான்ஸ் ஆடியுள்ளார்.

புஷ்பா படத்தில் இடம்பெற்ற சமந்தாவின் பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது போல ரெஜினா, சிரஞ்சீவியுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ள இந்த பாடலும் சினிமாவில் ஒரு அதிர்வலையை நிச்சயம் ஏற்படுத்தும்.