கிராமத்து படங்களை அதிரடியான கதை களத்துடன் கூறுவதில் வல்லவர் முத்தையா. ஏற்கனவே இவர் இயக்கிய கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ஆனாலும் ஒரே மாதிரியான திரைக்கதையுடன் அவரது படங்கள் இருப்பதால் சமீபத்தில் வெளியான கொடிவீரன், தேவராட்டம் தோல்வியை சந்தித்தது. மேலும் முத்தையா மீது மக்களிடையே ஜாதி படங்கள் இயக்குவது போன்ற பிம்பம் இருக்கிறது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய அடுத்த பட வேலைகளை அசுர வேகத்தில் முடித்துள்ளார் முத்தையா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீபாவளிக்கு நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தை தயாரித்து நேரடியாக டிவியில் வெளியிட்டது.
அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் அதே மாதிரி ஒரு படத்தை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். முத்தையா இயக்கும் புலிகுத்தி பாண்டி படத்தில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடித்துள்ளனர்.
புலிக்குத்தி பாண்டி படம் வருகிற பொங்கலுக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, முந்தைய படங்கள் போல இந்த படத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
சமீபத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தற்போது 30 நொடி டீஸர் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.