விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எப்போது சீசன் 6 தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதில் புதியதாக சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது எப்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமா, சீரியல், மாடலிங் போன்ற துறையிலிருந்து பரிச்சயமான நபர்களை போட்டியாளராக தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இந்த முறை வித்தியாசமாக பிக் பாஸ் செல்ல விரும்பும் பொதுமக்களும் கலந்து கொள்ள அரிய வாய்ப்பு ஒன்றை கொடுத்துள்ளது.
Also Read : அமீர்-பாவனி திருமண சர்ச்சை.. விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடியில் இருந்து விலகலா?
அதாவது தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை விஜய் டிவிக்கு அனுப்ப வேண்டும். அதிலிருந்து சிலர் தேர்ந்தெடுத்து பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக களம் இறங்க உள்ளனர். இந்த அறிவிப்பை பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு பாய் அறிவித்தார்.
இதனால் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்க போகிறது என்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் மற்ற சீசன்களில் பரிச்சயமான பிரபலங்கள் கலந்து கொண்டதால் பரபரப்பாக செல்லும். ஆனால் இந்த முறை வித்தியாசமான முயற்சியாக பொதுமக்கள் கலந்து கொள்வது ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பது சந்தேகம்தான்.
Also Read : போட்டி போட்டு ஸ்விம் சூட்டில் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகைகள்.. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்
அதுமட்டுமன்றி பிக் பாஸில் ஒரு வெற்றியாளருக்காக மற்ற போட்டியாளர்கள் சர்ச்சையை சிக்கி ரசிகர்களிடம் அவமதிப்பை பெறுகின்றனர். இதனால் பெரும்பாலான சினிமா பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயங்குகின்றனர்.
இதை யோசித்த விஜய் டிவி பொதுமக்களை பலிகேடாக இது போன்ற விதிமுறைகளைக் கொண்டு வந்ததாக சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முந்தி அடித்துக்கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
Also Read : பிக்பாஸ் பிரபலத்திற்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ்.. முட்டி மோதிக் கொள்ளும் சிவாங்கி