பிக் பாஸ் சீசன் 5 ல் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவரைப் பற்றி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
பிரியங்கா, தாமரையிடம் வாய்ப்பு என்று ஒண்ணு வரும்போதுதான் நீ கசப்புகளை சரி பண்ண வேண்டுமா, முதலிலேயே அதை சரி செய்தால் என்ன என்று கேட்கிறார். இதற்கு தாமரை, பிரியங்கா என்ன சொல்ல வருகிறார் என்று கேட்காமலேயே எந்த கசப்பை சரி செய்ய வேண்டும் என்று கோபமாக கேட்கிறார்.
உடனே பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சில கசப்பான நிகழ்வுகளை நீ சரி பண்ண வேண்டும் என்கிறார். ஆனால் தாமரை பிரியங்காவை முழுமையாக பேசவிடாமல் நான் வீட்டில் சரியாக வேலை செய்யாமல் இருக்கிறேனா என்று எதிர் கேள்வி கேட்கிறார்.
மேலும் சம்பந்தமில்லாமல் பேசாதே என்று பிரியங்காவை எச்சரிக்கிறார். அதற்கு பிரியங்கா நீ இந்த வீட்டின் கேப்டனாவதற்கு இப்பொழுது தகுதி இல்லாதவள் என்று சொல்கிறார். உடனே தாமரை அதை சொல்வதற்கு உனக்கு தகுதி இல்லை என்று கோபமாக பேசுகிறார்.
தாமரையுடன் மல்லுக் கட்ட முடியாமல் பிரியங்கா ஒரு ஓரமாக சென்று அமர்ந்து விடுகிறார். இவர்களின் இவ்வளவு சண்டையிலும் சக போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். ஏனென்றால் தாமரையிடம் பேசுவது சரியாக வராது என்று அனைவரும் ஒதுங்கி நிற்கின்றனர்.
தாமரையின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. மேலும் அவர் உச்சகட்ட மன அழுத்தத்தில் இருப்பதை போன்று தெரிகிறது. தாமரை பிக்பாஸ் வீட்டை விட்டு விரைவில் வெளியேறுவது அவர் உடல் நலத்திற்கு நல்லது.