விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து ரசிகர் கூட்டம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. மேலும் ஆரம்பத்தில் பாச மழை பொழிந்தாலும் நாளுக்கு நாள் அதன் பிறகு போட்டி பொறாமை அதிகரித்து சண்டை போட்டுக் கொள்வதுதான் நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக உள்ளது.
இந்த சீசனில் அனைத்து ரசிகர்களும் பாராட்டிய போட்டியாளர்கள் பாவனி மற்றும் ராஜு இவர்கள் இருவருக்கும் தற்போது ரசிகர்கள் ஆதரவு உள்ளது. ராஜு பொருத்தவரை சில விஷயங்களை வெளிப்படையாக கூறாமல் மனதிற்குள்ளே வைத்து காய்நகர்த்தலில் வல்லவர் தான் இதனை பல போட்டியாளர்களும் கூறியுள்ளனர்.
மற்ற போட்டியாளர்கள் தங்களது உண்மை முகத்தை கோபத்தின் மூலம் காட்டுகிறார்கள் ராஜு அப்படி இல்லாமல் வெளிப்படையாக அனைவரிடமும் பேசுவது ஏதாவது ஒரு பிரச்சினைக்கும் மட்டும் நியாயமாக குரல் கொடுப்பது போன்று பிம்பம் காட்டி வருகிறார். இதனால் ரசிகர்கள் ராஜு உண்மையாக இருக்கிறாரா என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
தற்போது பவானி மற்றும் ராஜி இடையே நடக்கும் சண்டையை விஜய் டிவி புரோமோவாக வெளியிட்டுள்ளது. இந்த வார எபிசோட் முழுவதும் இவர்களது சண்டைதான் பெரிய அளவில் பேசப்படும் என பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். பாவணி அதிக ரசிகர் பட்டாளம் உள்ள ராஜுவை போடா என்று கூறியிருப்பது சற்று வருத்தம் அளிக்கிறது.