b-raja

சைக்கோ கில்லராக களமிறங்கியுள்ள பாரதிராஜா.. மிரட்டும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ ட்ரைலர்

வித்தியாசமான கதைக்களத்தில் இறங்கியுள்ள பாரதிராஜா ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தின் அபிஷியல் ட்ரெய்லர் வெளிவந்து வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் பாரதிராஜா ஒரு சைக்கோ கில்லர் போல் தோற்றம் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு புதுவிதமான திரில்லர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் காட்சிகள் அனைத்தும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

dhanush

இந்த தலைமுறையில் ரிஸ்க் எடுப்பது தனுஷ் மட்டும்தான்.. அசுரனை பார்த்து பொறாமைப்பட்ட பாரதிராஜா.. வீடியோ

அசுரன் படத்தில் தனுஷ் எடுத்திருக்கும் கதாபாத்திரத்தை மிகவும் பெருமைப்படுத்தி பேசியுள்ளார் சைக்கோ படத்தின் வில்லி.

இவர் மீடியா ஒன்றில் பேட்டி அளிக்கும் போது இந்த தலைமுறையில் ரிஸ்க் எடுக்க நடிகர் யார் என்ற கேள்விக்கு உடனடியாக தனுஷ் மட்டும்தான் என்று கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஆனால் இது நிதர்சனமான உண்மைதான் ஏனென்றால் வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படங்கள் என்றே கூறலாம். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றிமாறன் பங்கு மிகுதியாக உள்ளது.

பிரபல விருது வழங்கும் விழாவில் அசுரன் படத்தை பற்றி பேசிய பாரதிராஜா தனுஷை புகழ்ந்து தள்ளி உள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது