அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளி அன்று வெளிவர காத்துக்கொண்டிருக்கும் பிகில் படத்தின் இரண்டாம் பாடல் வெளிவந்துள்ளது. இந்தப் பாடல் வெளிவருவதற்கு முன்னரே தளபதியின் ரசிகர்கள் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்து விட்டனர்.
இதில் வெறித்தனமான விஷயம் என்னவென்றால் தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார், முதல் முறை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள இந்த பாடல் உலக அளவில் தெறிக்க விடப் போவது என்பது உண்மைதான்.
இந்த படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் படத்தின் அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ள தன் படி இன்று இந்த இரண்டாம் ஆடியோ பாடலை வெளியிட்டுள்ளனர்.
இன்னும் சற்று நிமிடத்தில் இந்த பாடல் உலக அளவில் பேசப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தளபதி விஜயின் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெறித்தனமான இந்த பாடலை சினிமா பேட்டை ரசிகர்களுக்காக கீழே,