தமிழ் சினிமாவில் பல படம் நடித்துள்ளவர் பரத். சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதனால் தற்போது இவருக்கு குறைந்த அளவிலான படவாய்ப்புகள் வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின.
இருப்பினும் தற்போது பரத்திற்கு வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களும், திரில்லர் கதைகளும் அதிகமாக வருகின்றன. தற்போது பரத் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமேநல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.
தற்போது பரத் நடிப்பில் உருவான திரில்லர் படமான நடுவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இதில் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை எடுத்துக் காட்டும்போது போல் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. தற்போது இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.