miral-teaser-bharath

டீசர்லயே மிரளவிடும் பரத், வாணி போஜன் ஜோடி.. வைரலாகும் மிரள் பட டீசர்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திகில் மற்றும் ஹாரர் திரைப்படங்கள் மீது தனி ஆர்வம் இருக்கிறது. அப்படி வெளிவரும் திரைப்படங்களை அவர்கள் கொண்டாடுகின்றனர்? இதை நன்றாக புரிந்து கொண்ட இயக்குனர்களும் அதே பாணியில் திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.

அந்த வகையில் பரத், வாணி போஜன், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மிரள். சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராட்சசன், மரகத நாணயம் உள்ளிட்ட திகில் திரைப்படங்களை தயாரித்துள்ள ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

Also read : என்ன ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க.. பேட்டியில் கதறிய வாணி போஜன்

டீசரின் ஆரம்பத்திலேயே பரத் தன் மனைவி வாணி போஜன் மற்றும் மகனுடன் தன் அப்பா, அம்மாவை பார்க்க சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவரின் அப்பா கே எஸ் ரவிக்குமார் வாழ்ந்து வரும் வீட்டில் பல எதிர்பாராத திகில் சம்பவங்கள் நடக்கிறது.

வெள்ளை நிற முகமூடி அணிந்த சில உருவங்கள் அந்த வீட்டில் இருப்பவர்களை துரத்துகிறது. குழந்தையுடன் சொந்த ஊரில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க வந்த பரத்தும் வாணி போஜனும் இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

Also read : படமே ஓடல, கைவசம் இத்தனை படங்களா! கேரியரை காப்பாற்ற பரத் தேர்வு செய்த பாதை

அதிலும் காற்றாலையில், நடு இரவில் அமானுஷ்யத்துடன் சிக்கிக்கொண்டு அவர்கள் போராடும் காட்சி பயங்கர திகிலாக இருக்கிறது. மேலும் பின்னணி இசையும், திகில் படங்களுக்கே உரிய காட்சி அமைப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த டீசர் சில வருடங்களுக்கு முன்பு நந்தா, சாயாசிங் நடிப்பில் வெளிவந்த ஆனந்தபுரத்து வீடு திரைப்படத்தையும் ஞாபகப்படுத்தும் வகையில் இருக்கிறது.

இருந்தாலும் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக பெரிய அளவில் ஹிட் படங்களை கொடுக்காத பரத் இந்த படத்தை தான் முழுவதுமாக நம்பி இருக்கிறார். இது அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் தான் பார்க்க வேண்டும்.

மிரளவிடும் மிரள் பட டீசர்