nnor1

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திலிருந்து மெர்சலான ‘முட்டாதே முட்டாதே’ வீடியோ பாடல்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்திலிருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் வெள்ளித்திரைக்கு வந்தார், தற்போது நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் இறங்கி விட்டார் இவர் தயாரித்த முதல் படம் கனா. இதை தொடர்ந்து இவர் தயாரித்துக் கொண்டிருக்கும் இரண்டாவது படம், “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”.

இந்த திரைப்படத்தில் ரியோ ராஜ் , ShirinKanchwala நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருந்தார் தற்போது இந்த படத்தில் இருந்து ‘முட்டாதே முட்டாதே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

 

nenjamundu nemaiyundu odu raja

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் இருந்து சில நிமிட காட்சி.!

சிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனமான SK புரடக்ஷன் வைத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார், இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார்.

RJ விக்னேஷ் காந்த் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஹீரோவாக விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ ராஜ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மாடல் அழகி ஷெரின் நடித்து வருகிறார், இவர் முதன் முதலாக இந்த திரைப்படத்தில் தான் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் படம் நாளை வெளியாக இருக்கிறது, படத்தில் இருந்து சில நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.