narappa

ஒரு காட்சியைக் கூட மாற்றாமல் அப்படியே உருவான “நாரப்பா” ட்ரெய்லர்.. இதுக்கு அசுரனை டப் செய்திருக்கலாமே!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தனுஷின் சினிமா கேரியரில் முதல் நூறு கோடி வசூல் செய்த படமாக மாறியது.

மேலும் இந்த படம் தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தான் தெலுங்கிலும் நாரப்பா என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் நாரப்பா படத்தில் வெங்கடேஷ் நடிக்கும் கதாபாத்திரத்தின் கெட்டப் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வயதான தோற்றத்திற்கு மிகவும் பக்காவாக பொருந்தியிருந்த அந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆனால் சமீபத்தில் அசுரன் படத்தில் தனுஷ் இளவயது கேரக்டரில் நடித்தது போல வெங்கடேஷ் ட்ரை பண்ணியுள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதில் பார்ப்பதற்கு வெங்கடேஷ் இளமை தோற்றத்தில் இல்லை என்பதே படத்தின் குறையாக மாறிவிட்டது.

இந்நிலையில் வருகின்ற ஜூலை 20-ஆம் தேதி அமேசான் தளத்தில் நேரடியாக அசுரன் தெலுங்கு ரீமேக் நாரப்பா திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கான டிரைலரை அமேசான் இன்று வெளியிட்டது.

ரீமேக் படம் என்றால் அந்த மொழிக்கு ஏற்ற சில மாற்றங்களைச் செய்வார்கள். ஆனால் நாரப்பா படத்தில் தமிழில் எடுத்த அசுரன் படத்தில் ஒரு சின்ன காட்சி கூட மாற்றாமல் அப்படியே எடுத்து வைத்துள்ளனர். இதற்குப் பேசாமல் அசுரன் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டிருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.