kalyan

குஞ்சு முக்கியம் பிகிலே.. அந்த டோனில் பேசிய விவேக்.. தாராள பிரபு வீடியோ

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற ரொமாண்டிக் திரில்லர் படத்தில் நடித்தவர் ஹரிஸ் கல்யாண். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார்.

தாராள பிரபு என்று பெயர் வைக்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லரை ஜெயம் ரவி நேற்று வெளியிட்டார். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி உள்ளார். ஹரிஷ் கல்யாண், தடம் நாயகி தன்யா ஹோப், ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விவேக் தான் கதையின் முக்கிய நாயகனாக வருகிறார்.

ஸ்கிரீன் சைன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது. சர்ச்சைக்குரிய விந்து தானம், கருவுறாமை ஆகியவற்றை கான்செப்ட்டாக கொண்ட இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டிரெய்லரின் இறுதி காட்சியில் மலையாளத்தில் எல்லா உயிரினங்களுக்கும் குஞ்சு இருப்பதை போல் நமக்க குஞ்சு வேண்டும் என்று விவேக் பேசுகிறார். எப்படி அதை சொன்னார் என்பதை டிரெய்லரில் பார்த்து நீங்களே தெரிஞ்சுக்கங்க..!