நடிகர் அஜித்குமார் ஹெலிகாப்டர் ட்ரோனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் இறுதியாக நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இது மிகப்பெரிய ஹிட் ஆனது. பெண் சுதந்திரம் பற்றி இந்த படத்தில் நடித்ததற்காக அஜித்தை பாராட்டதவர்களே இல்லை. அற்புதமான கருத்தை இப்படம் மூலம் சொல்லியிருப்பார் அஜித்.
அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யாமி கவுதம் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் அஜித், போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்தது. தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், இந்தப் படத்துக்காக பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இங்கு படத்தின் அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பொங்கல் விடுமுறையில் நடிகர் அஜித் காஞ்சிபுரம் போலீசாருடன் இருக்கும்புகைப்படம் வெளியாகி உள்ளது. படத்துக்காக ஆயுதமில்லாத ஹெலிகாப்டர் டிரோனை இயக்குவது பற்றி ஆலோசனையை போலீசாரிடம் அவர் பெற்றதாகவும் அப்போது போலீசாருடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகுவதாவும் சொல்கிறார்கள்.

