vishal

44 வயதில் உதட்டை கடித்து விளையாடும் விஷாலின் வீடியோ.. உங்களுக்கே இது ஓவரா தெரியலையா பாஸ்

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முகத் திறமை கொண்டு இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் துப்பறிவாளன் 2 என்ற திரைப்படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் விஷால் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் விஷாலுடன் இணைந்து டிம்பிள் ஹயாதி, ரவீனா ரவி, ரமணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தித்திக்குதே கண்கள் என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணைய தளத்தை கலக்கி வருகிறது. மிகவும் ரொமான்டிக்காக இருக்கும் பாடல் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அதில் விஷால் செய்யும் ரொமான்ஸ் கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது.

44 வயதான விஷால் இந்தப் பாடலில் இன்னும் கூடுதல் வயதானது போல் காட்சியளிக்கிறார். மேலும் விஷாலின் உடல் எடை கூடி, முகம் முற்றிப் போய் இருக்கிறது. வேறு ஹீரோயின் யாரையாவது விஷாலுக்கு ஜோடியாக போட்டிருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு படத்தின் ஹீரோயின் டிம்பிள் ஹயாதி, விஷாலுக்கு பொருத்தமில்லாமல் தெரிகிறார்.

அதிலும் அவர்கள் இருவரும் அந்தப் பாடலில் ஓவர் நெருக்கம் காட்டியபடி லிப் கிஸ் கொடுப்பதும், உதட்டை கடித்து விளையாடுவதும் என்று அதிக ரொமான்ஸ் செய்வது ரசிகர்கள் உட்பட யாரையும் கவரவில்லை, மாறாக விஷாலுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்றே கேட்க தோன்றுகிறது.

தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் இசையையும், குரலையும் புகழ்ந்து வரும் ரசிகர்கள் படத்தின் ஹீரோ, ஹீரோயின் செய்யும் ரொமான்ஸை கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.