விஜய் டிவியில் பல ஆண்டுகளாக முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி. மேலும் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறார் டிடி.
அதுமட்டுமில்லாமல் திவ்யதர்ஷினி பா பாண்டி, சர்வம் தாளமயம் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் டிடி.
இந்த நிலையில் திவ்யதர்ஷினி தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு, இணையத்தை சொக்க வைத்துள்ளது.
அதாவது தற்போதெல்லாம் புகைப்படங்களை எடுத்து, அதை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது ஃபேஷனாகிவிட்டது.

அதே போல்தான், டிடியும் அவ்வப்போது புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் டிடி தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெள்ளை நிற புடவையில் அம்சமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
