நடன இயக்குனராக மிகவும் பிரபலமானவர் தினேஷ். இவர் யதார்த்தமான கதை அம்சத்தில் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் ‘ஒரு குப்பை கதை’.
அந்த வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் “நாயே பேயே”.இந்த படத்தை சக்திவாசன் இயக்குகிறார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.
‘தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பை கதை’ ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றிய கோபிகிருஷ்ணா இப்படத்தை தயாரிக்கிறார். இவருடன் இணைந்து கட்டிங் வொட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
நாயைக் கடத்த முயலும் ஹீரோ அண்ட் பாய்ஸ் மாறாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவிப்பதை நகைச்சுவை கலந்து, ஹாரர் ஜானரில் படமாக எடுத்துள்ளார் இயக்குனர்.