தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வரும் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு சென்றபோது தனுஷ் போதையில் ஜெயம்ரவி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இது எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்பது தெரியாமல் திடீரென அந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பானதால் இருதரப்பும் அப்செட்டில் உள்ளதாம். அதிலும் குறிப்பாக ஜெயம்ரவியின் குடும்பம் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.
தனுஷ் ஹாலிவுட்டில் இருப்பதால் இந்த புகைப்படம் பற்றிய செய்தி சென்றடைந்ததாக தெரியவில்லை. எங்கேயோ போற மாரியாத்தா என்மேல் வந்து ஏராத்தா என்ற கணக்காக எப்பவோ நடந்ததை இப்போது கிளறி விட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
இந்த புகைப்படம் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ரசிகர்களுக்கு ஏற்பட்ட விடக்கூடாது என்பதற்காக ஜெயம்ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியுடன் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் மனைவிக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு உள்ள கணவன் என்ற கருத்தில் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் தன்னுடைய மனைவியின் பெயர் டேமேஜ் ஆகி விடக்கூடாது என்பதற்காக இந்த வீடியோவை அவர் வெளியிட்டதாகவும் கூறுகின்றனர்.
https://www.youtube.com/watch?v=AafaqntudWM
ஜெயம் ரவியும் மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது அவர்களுக்கு விவரம் தெரியும் வயதில் குழந்தைகள் இருந்தாலும் இன்னும் இருவருக்குள்ளும் ரொமான்ஸ் பொங்கி வழிகிறது என்பதை அவ்வப்போது புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு தெரிவிப்பார்கள்.