jappan

ராக்கெட் ராஜாவை விட டபுள் மடங்கு சேட்டை செய்யும் கார்த்தி.. ட்ரெண்டிங் ஆகும் ஜப்பான் பட டீசர்

Jappan Movie Teaser: கார்த்தி நடிக்கும் படங்கள் பொதுவாகவே வித்தியாசமான கேரக்டரிலும், ஜாலியான ஒரு படத்திலும் நடிக்கக் கூடியவர். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களை சரியான விதத்தில் என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறது. அப்படித்தான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக பொண்ணுங்களிடம் சேட்டை பண்ணிக்கொண்டு ஜாலியான ஒரு கேரக்டராக நடித்திருப்பார்.

அதே மாதிரி தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் உடம்பு முழுவதும் தகதகவென மின்னுகிற மாதிரி சட்டையை போட்டுக்கிட்டு பற்களில் ஒரு தங்க பல்லை வைத்துக்கொண்டு பார்க்கவே காமெடி பீஸ் ஆக தெரிகிறது. இப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரை பார்க்கும் பொழுது ஒரு நகைக்கடையில் 200 கோடி நகை திருட்டுப் போனதை ஒட்டி உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நகை கடையின் சுவற்றில் ஒரு ஓட்டையை போட்டு 200 கோடி நகையே ஆட்டைய போட்டு வெளிநாடுகளுக்கு உல்லாசமாக சென்று ராஜா வாழ்க்கை வாழும் கேரக்டரில் அலைகிறார்.

இதனால் திருட்டு போன நகையை கண்டுபிடிக்கும் விதத்தில் போலீசார் இவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிக்கொண்டு எப்படி கார்த்தி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகிறார் என்பதும், எதனால் நகை திருடுகிறார் என்பதையும் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இதில் வரும் டயலாக், எத்தனை குண்டு போட்டாலும் ஜப்பானை யாரும் அழிக்க முடியாது என்று சொல்லும் வசனம் ரொம்பவே ஹைலைட்டாக இருக்கிறது. அத்துடன் டார்க் காமெடி மூவியாக எடுக்கப்பட்டு அனைவரையும் என்டர்டைன்மென்ட் பண்ணப் போகிறது. இப்படமும் வழக்கம் போல் கார்த்திக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் கார்த்திக் நடிப்பு மற்ற படங்களை விட தூக்கலாகவே இருப்பது போல் தெரிகிறது. மேலும் இப்படத்தில் அணு இமானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், ஜித்தன் ரமேஷ், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை தயாரித்தவர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ். கண்டிப்பாக இந்த வருட தீபாவளி ஜப்பான் படத்துடன் சரவெடியாக இருக்கப் போகிறது.

Adiye trailer

வெங்கட் பிரபவை வைத்து ஜிவி பிரகாஷ் உருட்டும் அடியே ட்ரெய்லர்.. அடுத்த சயின்ஸ் பிக்சன் கதை ரெடி

Adiye Movie Trailer: காதல், காமெடி, ரொமான்டிக் என ஒரே ஜானரில் நடித்துக் கொண்டிருந்த ஜிவி பிரகாஷுக்கு தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டும் விதத்தில் அடியே திரைப்படம் அமைந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியுடன் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

அடியே படம் தமிழில் மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையாகும். படித்துவிட்டு வேலை இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷ் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ரொமான்டிக் காமெடியாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also Read:அதிரடியான ட்விஸ்ட் வைத்த லியோ லோகேஷ்.. தள்ளிப்போகும் தளபதி-68, பதட்டத்தில் வெங்கட் பிரபு

படத்தின் ட்ரெய்லர் ஆரம்பிக்கும் பொழுது திடீரென தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் ஜிவி பிரகாஷ், தொலைக்காட்சியில் செய்தியை பார்க்கிறார். அதில் நடிகர் விஜய் நடித்த யோகன் திரைப்படத்தின் 150ஆவது வெற்றி விழாவிற்கு இந்திய பிரதமர் கேப்டன் விஜயகாந்த் செல்கிறார் என்ற செய்தி ஒளிபரப்பாகிறது. மேலும் சென்னையில் பனிப்பொழிவு, காஷ்மீரை போல் இருப்பது போலவும் காட்டப்படுகிறது.

அடுத்த காட்சியிலேயே ஜிவி பிரகாஷ், வெங்கட் பிரபுவை பார்த்து சார் நீங்க இயக்குனர் வெங்கட் பிரபு தானே என கேட்கும் பொழுது அவர் ஏன் என்ன பார்த்தா அவ்வளவு கொடுமைக்காரன் போல வா தெரிகிறது என கேட்கும் பொழுது குபீரென சிரிப்பு வருகிறது. மேலும் பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளர் எனவும், இரண்டு ஆஸ்கார் வாங்கி இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. கோமாளி படத்தில் ஹீரோ ஜிவி பிரகாஷ் என்பது போல் அவரிடமே சொல்கிறார்கள். இது அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

Also Read:யுவன் சங்கர் ராஜாவை குஷிபடுத்திய தளபதி.. சுயநலத்திற்காக யாரும் செய்யாததை செய்த விஜய்

ட்ரெய்லர் ஆரம்பித்த சில வினாடிகளிலேயே இது பாரலல் யுனிவர்ஸ் கான்செப்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என தெரிகிறது. இந்த படத்தில் 96 படத்தில் நடித்த கௌரி ஜிவி பிரகாஷின் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்ப நம்ம பார்த்துகிட்டு இருக்க உலகம் எல்லாரும் சேர்ந்து எடுத்த ஒரே முடிவால், ஒரே நேர்கோட்டில் செல்கிறது என வித்தியாசமான சயின்ஸ் பிக்சனை வெங்கட் பிரபு ஜி வி பிரகாசுக்கு விளக்குகிறார்.

பாரலல் யுனிவர்சில் சிக்கிக்கொண்டு ஜிவி பிரகாஷ் தவிப்பது போல இந்த படம் இருக்கும் என தெரிகிறது. மேலும் ட்ரைலரின் இறுதியில் வெங்கட் பிரபு தன்னுடைய ஸ்கோருக்கு மங்காத்தா மற்றும் மாநாடு படத்தை பற்றியும் பேசி இருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.